| |
| | கலைத்திறங் காட்டும் காரிகை படமும், | |
| | நிலைத்துச் சிலையாய் நிற்பவள் முகமும், | 155 |
| | வேற்றுமை யின்றித் தோற்றுதல் கண்டு கோற்றொடி முகத்தின் குறிப்பை நோக்கினர்; அசையாப் பூங்கொடி, அன்னையின் முகமும் நசைசேர் படத்தில் நங்கையின் முகமும் | |
| | பெருநிலக் கிழாரின் பேசா முகமும் | 160 |
| | திரும்பத் திரும்பத் திகைத்து நோக்கினள்; | |
| | | |
| | அருண்மொழி வினாதல் | |
| | | |
| | அருண்மொழி விழியும் அருகினில் நிற்கும் பெருநிலம் உரியவர் இருவிழி யும்புனல் பெருகி வழிந்தது; பெரியரை நோக்கிப் | |
| | `பெருமனம் உடையீர்! கிழத்தியின் பெயரை | 165 |
| | அருளுதி ராயின் ஆறுதல் பெறுவேன்' இவ்வணம் அருண்மொழி இரைந்துரை கூறச் | |
| | | |
| | நிலக்கிழார் மறுமொழி | |
| | | |
| | `செவ்விதின் அனைத்துஞ் செப்புவல் கேண்மோ! கொவ்வை யிதழினள், கூரிய விழியினள், | |
| | கவ்வும் வகையாற் கனியிசைத் தொழிலாள், | 170 |
| | தென்னகம் பிறந்தவள், என்னகம் நிறைந்தவள், கன்னலின் அனையாள், காதல் மனையாள் என்னிளம் பருவத்து முன்னம் ஒருநாள் வாணிக முறையாற் காழகம் செல்வுழித் | |
| | தோணியில் அவளுருத் துணைவிழி விருந்தாக் | 175 |
| | காணலும் என்னுளங் கவர்ந்தனள்; மறுநாள் காழக நகரின் கலைதெரி அரங்கில் ஏழிசை வல்லவள் இசையினைக் கேட்டேன் காதலும் கலையும் கனிந்திடத் தனியிடம் | |
| | குறித்துப் பலநாட் கூடிப் பழகிஅவ் | 180 |
| | வொருத்தியை மணந்தென் உயிரின் மேலா | |
| --------------------------------------------------------------- |
| | கோற்றொடி - அருண்மொழி, நசை - விருப்பம், கனிஇசை - கனிந்த இசை, அனையாள் - போன்றவள், காழகம் - பர்மா. | |
| | | |