| |
| | மதித்து வாழ்ந்தேன்; மணந்தவள் காதற் பரிசில் எனஒரு பச்சிளங் குழவி தருகையில் என்னைத் தணியாத் துயரில் | |
| | உருகிடச் செய்துயிர் ஒடுங்கினள்; யானும் | 185 |
| | மறுமணம் புரியா மனத்தினேன் ஈன்ற சிறுமியின் முகத்துச் சிரிப்பினைக் கண்டு துயரம் மறந்து துணைவிழி யிமைபோல் அயர்வொன் றின்றி அவளைப் புரந்தேன்; | |
| | கட்டிளம் பருவங் கண்டனள் அவளும் | 190 |
| | விட்டுப் பிரிந்தனள்; வேதனைக் கடலுள் மூழ்கிக் கிடந்தேன்; முதிராப் பூங்கொடி ஆழ்துயர் துடைத்தனள், அவளென் மகளென உறுதி எடுத்தேன் உறுதுயர் விடுத்தேன், | |
| | இறுதி விரைவினில் எய்துவ துறுதி | 195 |
| | பெறுநிதி அனைத்துமிப் பேதையின் பணிக்கே தருவதென் றெண்ணி அறுதியும் செய்தேன்; காதல் மனையின் பெயர்சொல மறந்தேன் ஏலங் குழலி' என்றவர் செப்புமுன் | |
| | | |
| | அருண்மொழி அரற்றுதல் | |
| | | |
| | `ஆ'வென் றலறிய அருண்மொழி மீண்டும் | 200 |
| | கூவி யழுதனள்; குறளகத் தலைவர் அறவுரை கூறி ஆறுதல் தந்தனர்; செறிதொடி அருண்மொழி செங்கை கூப்பிப் `பொய்யிலை பொய்யிலை என்மகள் பூங்கொடி | |
| | ஐயநின் மகளே! ஐயநின் மகளே! | 205 |
| | மெய்யிது மெய்யிது மேலோய்! நன்மகள் சேரிடஞ் சேர்ந்தனள், சேல்விழி நின்மகள்' என்பன கூறி இருவிழி பொழிந்தனள்; | |
| | | |
| | அடிகள் வினாதல் | |
| | | |
| | முன்புள அடிகள் மென்மொழி விளித்துத் | |
| --------------------------------------------------------------- |
| | அயர்வு - வருத்தம், புரந்தேன் - காத்தேன், முதிரா - முற்றாத, இறுதி - இறப்பு, அறுதி - முடிவு. | |
| | | |