| | குறுமன மிஃதாம் விரிமனம் வேண்டும் யாதும் ஊரென ஓதிய நாமோ | |
| | தீதெனப் பிறமொழி செப்பித் திரிவது? | 25 |
| | மோதும் பகைமை முகிழ்ப்பது நன்றோ?' நல்லுரை இவ்வணம் நவில்வது போலச் சில்லுரை சிலர்சிலர் செப்பித் திரிந்தனர்; மறுப்புரை அவர்க்குக் கொடுத்திடும் பொறுப்பினள் | |
| | விரித்துரை வழங்கி விளக்கினள் இவைஇவை; | 30 |
| | `அகத்தும் பிறமொழி வெறுத்திடல் அறிகிலம் பகுத்தறி வுடையோம் பண்பும் உடையோம் வேண்டும் மொழிகளை வேண்டுவோர் பயின்றிங் கீண்டி யுறையுநர் எண்ணிலர் அறிக! | |
| | | |
| குறுமனம் அன்று |
| | | |
| | குறுமன மென்றும் விரிமன மென்றும் | 35 |
| | சிறுமன முடையோர் செப்புவ கொள்ளேல்! தனியொரு மாந்தன் தன்னலம் பேணின் முனியத் தகுமது குறுமன மாகும்; தன்னல மறுப்பது விரிமன மாகும், | |
| | முன்னவர் பேணிய மொழியும் நாடும் | 40 |
| | மன்பதை முழுமைக் குரியன வன்றோ! அன்புளங் கொண்டோர் அவற்றைப் பேணின் தென்படும் குறைஎன்? தெளியா மாந்தர் குறுகிய மனமெனக் குளறுவர் நம்பேல்! | |
| |
| சான்றோர் நெறியே |
| |
| | பெறுபுகழ்த் தாய்மொழி பேணாஅ ராகி | 45 |
| | வருமொழி வாழ்த்தி வரவுரை கூறுநர் அறமன முடையரென் றறிவுளோர் பகரார்; | |
| --------------------------------------------------------------- |
| | விரிமனம் - பரந்தமனம், முகிழ்ப்பது - உண்டாவது, உறையுநர் - வாழ்பவர், எண்ணிலர் - கணக்கிலாதவர், செப்புவ - சொல்பவை, மாந்தன் - மனிதன், முனிய - வெறுக்க, பேணார் - பேணாதவர். | |
| | | |