| | மணிமே கலையும் மார்பில் மணியும் | 105 |
| | அணிமிகு செவியில் அரியகுண் டலமும் அணியும் ஒருத்தி ஆயிடை நின்றவள்; | |
| |
| தமிழணங்கின் உணர்ச்சிமொழி |
| | | |
| | `என்னுயிர் மகளே! பொன்னிகர் மகளே! நின்னலங் கருதிலை, என்னலங் கருதினை; | |
| | உண்டுஞ் சுவைத்தும் உயிர்வாழ் உலகில் | 110 |
| | தொண்டுகள் புரிந்தே துவண்டனை நாளும்; பெருத்த உடலினைப் பேணுவா ரிடையே கருத்தினை வளர்த்தாய்! பொறுப்பினை வளர்த்தாய்! உணவினை வேண்டி உழல்வா ரிடையே | |
| | உணர்வினை ஊட்டி ஊட்டி வளர்த்தனை; என்மகார் தாமே ஒன்னா ராயினர்; நின்னால் எனக்கு நீணிலத் துரிமை இன்னே வாய்க்குமென் றெண்ணி யிருந்தேன்; கொன்னே கழிவதோ மின்னே' என்றனள்; | 115 |
| | தன்னே ரில்லாத் தையல் பூங்கொடி, அன்னா யெனுஞ்சொல் அரைகுறை யாகச் சொல்லா முன்னர்த் துணைவிழி கசிந்தது; நல்லாள் விழிமலர் நனைந்தது குவிந்தது; | 120 |
| | | |
| | விடுதலை விடுதலை | |
| | | |
| | விடுதலை ஆணைத் திருமுகம் ஏந்தி | |
| | நெடுமகன் ஒருவன் நின்றனன் ஆங்கண்; மருத்துவர் ஆங்கே மனமுவந் தோடி ஒருத்தியின் முகத்தை உற்று நோக்கினர்; விடுதலை விடுதலை விடுதலை என்றனர்; உடலெனுஞ் சிறையுள் ஒடுங்கிக் கிடந்து | 125 |
| | படுமுயிர் சென்றது விடுதலை பெற்றே! | 130 |
| | காதைகள் 31 வரிகள் 5243 | |
| --------------------------------------------------------------- |
| | மகார் - மக்கள். | |
| | | |