| 8. கடல்நகரில் தங்கிய காதை. | 
                  | நகரத்தார் வேண்டுதல் | 
                  |  | 
                  |   | தாமரைக் கண்ணி தன்னொடு வந்த தோமறு பூங்கொடி தூயநல் லுரையால்
 திருந்திய மனத்தினர் திரள்கொடு வந்தே,
 `இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னாள்
 |  | 
                  |  | நின்னுரை கேட்டோர் நேரிய ராகிப் | 5 | 
                  |  | புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்து மல்கிருள் அகல மதியொளி பெற்று
 நல்லுணர் வெய்தி நலம்பெறல் திண்ணம்
 ஆதலின் நங்காய்! அருளுதி, நின்னகர்ப்
 |  | 
                  |  | போதல் ஒழிமதி!' எனுமுரை புகன்றனா | 10 | 
                  |  |  |  | 
                  |  | இசைவு தருதல் |  | 
                  |  |  |  | 
                  |  | பக்கல் நிற்கும் கண்ணியைப் பார்த்தனள் அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின்
 தோமறு பணிசெயத் தூயவ ளாகிய
 தாமரைக் கண்ணி தந்தனள் இசைவே;
 |  | 
                  |  | ஆண்டிருந் தேகி அணிமலர்க் கண்ணி | 15 | 
                  |  | மீண்டனள் மணிநகர்; மெல்லியல் அல்லி |  | 
                  |  |  |  | 
                  |  | அல்லி வினவல் |  | 
                  |  |  |  | 
		          |  | ஈண்டிய அன்புளத் தெழிற்பூங் கொடியைக் காண்டல் விருப்பொடு கடுகி வந்தனள்;
 தோழியைக் காணாள் துயர்படர் நெஞ்சினள்
 |  | 
		          |  | `ஆழி நடுநகர் ஆங்கண் சென்றீர்! | 20 | 
		          |  | நீயோ தமியள் நின்றிடல் கண்டேன்! |  | 
		          |  |  |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | தோமறு - குற்றமற்ற, திரள்கொடு - திரளாக, நேரியர் - நல்லவர்,           புன்முறை - தீயவழி, புந்தி - மனம், மதி - அறிவு, ஒழிமதி - தவிர்க்க, கண்ணி -           தாமரைக்கண்ணி, ஈண்டிய - நிறைந்த, தமியள் - தனித்தவளாய். |  | 
                  |  |  |  |