| | ஆயே! என்றன் ஆருயிர்த் தோழி யாண்டுளாள் நிகழ்ந்தது யாதென் றுரை'என | |
| |
| தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் |
| |
| | ஆண்டு நிகழ்ந்த அத்துணைச் செய்தியும் | |
| | மூண்டெழும் உணர்ச்சி முந்துற மொழிந்து'இனும் | 25 |
| | புகலுவென் கேட்டி! பூங்கொடி ஆற்றிய தகவுரை கேட்டோர் அகமிக வுருகி இன்னுஞ் சின்னாள் இருந்திடல் வேண்டும் என்ன நயந்தனர்; எழிற்பூங் கொடியும் | |
| | ஆண்டுளார் பண்பொடு அவர்தம் அரசியல் | 30 |
| | காண்டகு நெஞ்சினள் கனிவோ டிசைந்தனள்; சின்னாள் இருந்து செந்தமிழ் பரப்பிப் பின்னர் மீளுவள் பேதுறல் தவிர்நீ' இன்னணம் தாமரைக் கண்ணி இசைத்தலும் | |
| |
| அருண்மொழி மனநிலை |
| |
| | அல்லி வருந்தி அருண்மொழி தன்பாற் | 35 |
| | புல்லி, அனைத்தும் புகன்றது கேட்டவள் கலங்கினள் ஆயினும் `கன்னித் தமிழின் விலங்குபடை படஅவ் வீரங் காட்டினள்; வாழ்கஎன் மகளே! வாழ்கஎன் மகளே! | |
| | வாழ்கஎன் தமிழே! வாழ்கஎன் தமிழே!' | 40 |
| | எனுமுரை கூறி இறுமாந் திருந்தனள் மனமொழி செயலெலாம் மாசறத் திகழ்ந்தவள்; | |
| |
| பூங்கொடி கலக்கம் |
| |
| | கல்ல்லென் பேரூர் கடல்நகர் ஆங்கண் புல்லர் வீசிய கல்லின் விசையால் | |
| --------------------------------------------------------------- |
| | ஆயே - தாயே, நயந்தனர் - வேண்டினர், பேதுறல் - மயங்குதல், புல்லி - பொருந்தி, இறுமாந்து - செம்மாந்து, கல்ல்லென் - (ஒற்றளபெடை) `கல்' என்னும் ஒலியுடைய, விசை - வேகம். | |
| | | |