| | செந்தமிழ் காக்க வந்தவள் என்மகள், | 20 |
| | எந்த இடும்பையும் ஏற்றிட வல்லாள், பகைஎறி வடிவேல் பைந்தமிழ் காக்கும் குகைவதி புலிபெறு குலக்கொடி அவளாம், அவன்வழி வந்தவள் அஞ்சாள் பகையைக் | |
| | கவண்விடு கல்லால் கலங்குதல் செய்யாள், | 25 |
| | என்று தேறினள்' எனுமுரை கேட்டு நின்றவள் `என்தாய் வாழிய' என்றனள்; | |
| |
| கோமகன் நிலைமை |
| |
| | `குலக்கொடி இன்னுங் கூறுவென் கேட்டி! கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சிய | |
| | கோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் | 30 |
| | பாமக னாகிய பாவலன் பெயரால் படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்; உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார் தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமை | |
| | முடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்' | 35 |
| | எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்து மனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; | |
| |
| பொதுப்பணி வேடர் |
| |
| | `இருஇரு செல்வி! இளையோன், தமிழ்க்குப் புரிபணி உளத்தில் பூத்த தன்றே! | |
| | தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் | 40 |
| | பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்; மதுநலங் கண்ட வண்டென மக்களும் மதிமயக் குற்று வாழ்த்தொலி எழுப்புவர்; புதுநிலை எய்துவர் புகழ்பொது மக்களால்; | |
| --------------------------------------------------------------- |
| | இடும்பை - துன்பம், வதி - தங்கும், கூர்ந்து - மிகுந்து, இளையோன் - கோமகன், ஆர்வலர் - ஆவலுடையவர். | |
| | | |