| 11. ஏடு பெற்ற காதை | 
                  | பொழிலில் பூங்கொடி | 
                  |  | 
                  |   | தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்த் தோமறு தமிழ்க்குத் தொண்டுகள் ஆற்றப்
 பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள்
 பொழில்நலங் காணும் விழைவினள் செல்வுழி,
 |  | 
                  |  |  |  | 
                  |  | மூதாட்டி வருகை |  | 
                  |  |  |  | 
                  |  | மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி | 5 | 
                  |  | நரைமூ தாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும்
 முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள்,
 அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே
 |  | 
                  |  | எதிர்ப்பட் `டாயிழாய் யார் நீ?' எனலும், | 10 | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி தன் வரலாறு கூறல் |  | 
                  |  |  |  | 
                  |  | `முதிர்பரு வத்தாய்! மொழிகுவென் கேளாய்! உலகந் தோன்றி ஊர்ந்து வளர்ந்து
 பிள்ளைப் பருவத்துப் பேசிய மொழியாம்
 வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந்
 |  | 
                  |  | தறிவொளி விளங்க ஆற்றினர் தந்தை; | 15 | 
                  |  | குருடு படுமதிக் குழுவினர் சதியால் மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி
 ஈன்ற மகள்யான் என்பெயர் பூங்கொடி,
 |  | 
                  |  |  |  | 
                  |  | இல்லறம் தவிர்ந்தமை கூறல் |  | 
                  |  |  |  | 
                  |  | தனித்தொரு மகள்இத் தரணியில் வாழ |  | 
                  |  | நினைத்தல் பலபிழை நிகழ்வதற் கேதென | 20 | 
                  |  | உலகம் மொழிதல் உண்மையே யாயினும் |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | தவிர்ந்த - நீங்கிய, புரை - குற்றம், ஆயிழாய் - பூங்கொடி, ஆற்றினர்           - செய்தனர். |  | 
                  |  |  |  |