|             |                               செயல்படல் இன்றிச் சிதைந்தது நூலகம்;           வீடுகள் தோறும் ஏடுகள் தேடிப்           பாடுகள் உறும்யான் பயன்தரும் எனநினைந்           தோடினென் ஆங்கே தேடினென் ஏடுகள்; |             |         
                  |   |         
                  |                                சிதைந்த சுவடிகள்  |         
                  |   |         
                  |   |                                         தென்மொழி வடமொழி தெலுங்கு முதலாப் |           75 |         
                  |   |                                         பன்மொழி ஏடுகள் பற்பல கண்டேன்,           ஓவியம் சிற்பம் மருத்துவம் ஒண்டமிழ்ப்           பாவினில் உரைக்கும் ஏடுகள் கண்டேன்,           வானநூல் ஏடும் வகைவகை கண்டேன், |             |         
                  |   |                                         ஊனம் இலாத தொன்றும் இல்லை;  |           80 |         
                  |   |                                         முதலும் முடிவும் காணாச் சுவடிகள்,           சிதலும் மண்ணும் சிதைத்த சுவடிகள்           கண்டேன் கண்டேன் கலங்கினென் உள்ளம்; |             |         
                  |   |         
                  |                                எரிந்த ஏடுகள்  |         
                  |                       |         
                  |   |                                         அண்டையில் நின்ற அந்நூல் நிலையப் |             |         
                  |   |                                         பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், |           85 |         
                  |   |                                         இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்           `அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,           வெந்நீர் வேண்டி விறகென அவற்றை           எரித்தோம்' என்றனன்; துடித்ததென் மனனே; |             |         
                  |   |                                         எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! |           90 |         
                  |   |                                         கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!           கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!           வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்           கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்; |             |         
                  |   |                                         என்னே! என்னே! இவர்தம் மதிதான்! |           95 |         
                  |   |           மடமை என்கோ? கொடுமை என்கோ? |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                                         பாடுகள் - துன்பங்கள், ஊனம் - குறை. |             |         
                  |   |             |             |