பக்கம் எண் :

10

அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிடமுடியாது - மறந்துவிட முடியாது
என்ற உண்மையைத்தானே?

‘சரி, பாரதி உண்மைக் கவிஞர் தான்; ஒப்புக்கொள்ள
வேண்டியதுதான்; ஆனால் அவருக்குப்பின் வேறு உண்மைக்
கவிஞர்கள் இருக்கிறார்களா?’

ஏன் இல்லை? பாரதிக்குப்பின்... பாரதியின் ‘கவிதா மண்டலத்தைச்
சார்ந்த’ கனகசுப்புரத்திரனம் என்ற பாரதிதாசன் இல்லையா?
பாரதிதாசன் ஓர் உண்மைக் கவிஞர் இல்லையா? புரட்சிக் கவிஞர்
இல்லையா?

‘சரி, பாரதிதாசனுக்குப்பின்....?’

ஏன்,இல்லை....? இருக்கிறார்கள், அவர்களுள், இதோ ஓர
உண்மைக் கவிஞர்.... எழுச்சிக் கவிஞர்.... இராசேந்திரன். (மீரா)

எதுகவிதை? இப்படி ஒரு வினாவை எழுப்பி முப்பது நாற்பது
பக்கங்களில் விடைகூற முயல்வார் சிலர். நான் அந்த வீணமுயற்சியில்
இறங்க விரும்பவில்லை.

எவரேனும் என்னிடம் ‘எது கவிதை’ ? என்று கேட்டால்
‘இராசேந்திரன் கவிதைகள்’ என்ற இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு
பாட்டையும் பதிலாகக் காட்டுவேன்.... பாட்டின் ஒவ்வொரு அடியிலும்
கவிதை! ஒவ்வொரு சீரிலும் கவிதை! ஒவ்வொரு அசையிலும் கவிதை!
மருக்கொழுந்தைப் போன்ற மனங்கவரும் கவிதை! பருத்தி விதையைப்
போன்ற பயன்தரும் கவிதை! கருநெல்லிக் கனியைப் போன்ற
காலத்தை வெல்லும் கவிதை! கவிதையோ கவிதை!

இரண்டாம் உலகப்பெரும்போர் நடந்து கொண்டிருந்த காலம்;
வானத்தில் வட்டமிட்டவாறு செர்மானிய விமானங்கள் இங்கிலாந்து
நாட்டில் குண்டுகளை வீசிக் கொண்டிருந்த நேரம்; அந்த நேரத்திலும்
இலண்டன்