பக்கம் எண் :

20

அப்புறம் கடைசிவரை அவரைப் பார்க்க முடியவில்லை. கவிஞர்கள்
முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னடியான் போல் பார்க்க, பழகக்
கொடுத்து வைக்கவில்லை.

சின்ன வயது முதல் எழுபது தொடக்கம் வரை நான் திராவிட
இயக்கத்தில் ஒன்றியிருந்ததற்கு அண்ணாவைப் போல பாவேந்தரும்
மற்றொரு காரணம். அவர் கவிதைகளைப் படித்துச் சுவைத்த
நெஞ்சம், அவரைப் போலவே என்னையும் திராவிட
இயக்கப்பாடல்களைப் புனையத் தூண்டியது.

முரசொலி முதலிய பத்துக்கு மேற்பட்ட தி.மு.க இதழ்களில்
அறுபதுகளின் ஆரம்பத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
மதுரையிலிருந்து வெளிவந்த கருமுத்து தியாகராசனாரின் ‘தமிழ்நாடு’
நாளிதழின் ஞாயிறு மலர்களில் அரசியல் அல்லாத பொது
நிலைக்கவிதைகளை வெளியிட்டிருக்கிறேன்.

இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தனித்திராவிட நாடு தமிழ்
மறுமலர்ச்சி, சாதி மதஒழிப்பு, கடவுள் மறுப்பு, சமூக சீர்திருத்தம்,
சமத்துவ சமுதாயம், கலப்புத் திருமணம் முதலியவை என்
பாடுபொருள்களாயின. கவிஞன் என்றால் காதலுக்குக் குறைச்சல்
இருக்காது. (அறிஞர் தமிழண்ணல் காதலை ஒரு பக்தி இயக்கமாக
வளர்த்தவன் நான் என்கிறார்.) இயற்கைப் புனைவும் இருக்கும்.

59, 60, 61 ஆண்டுகளில் தியாகராசர் கல்லூரியில் முதுகலை
படிக்கும் போது இத்தகைய கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன்.
பத்திரிகைகளில் அவ்வப்போது வருவதைப் பார்த்துப்
பரவசப்படுவேன்.

அப்போது கவிக்கோ அப்துல் ரகுமான் என் வகுப்புத் தோழர்.
நான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு முன் சில கவிதைகளை
அவரிடம் கொடுப்பேன். அவர் என்னுடைய பச்சையான அரசியல்
கவிதைகளை வெளியிடாதீர்கள்