பக்கம் எண் :

21

என்று தடுப்பார். எதிர்ப்பார். அவருக்கு சுத்தக் கவிதைதான்
(Pure Poetry) பிடிக்கும்.

ஒருமுறைஉவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கல்லூரியில்
கவியரங்கம்.ரகுமான் ‘முத்துக்கள்’ என்ற தலைப்பில் பாடினார். அது
முத்துப் போன்ற கவிதை. ‘கடவுள்’ என் தலைப்பு. இங்கர்சாலைப்
படித்து விட்டு பெரியாரைப் படித்துவிட்டு அவர்கள் பாணியில்
கடவுளை விமர்சனம் செய்து 12 எண் சீர் விருத்தங்கள் பாடினேன்.
கவியரங்கம் முடிந்ததும் ரகுமான் பக்கம் கவிதை பக்தர்கள்.... என்
பக்கம் கழகப் பித்தர்கள். திரு. பெ. சீனிவாசன் (முன்னாள் சட்ட
மன்றத் துணைத் தலைவர்) குறிஞ்சி சுப்பிரமணியன், தம்பி நா.
காமராசன், திரு.மாசிலாமணி போன்ற கழகக் காளையர்கள் பலரும்
‘கடவுள்’ கவிதை இருக்கிறது. ஆனால் வெளியிட விருப்பமில்லை.
‘எனக்கில்லை கடவுள் கவலை’ என்பது என் கொள்கையாகிவிட்டது.

பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல், நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாதநோய் ஆகிய
முந்நோய்களால் தாக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறேன்.
‘இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள். கோயிலுக்குப் போங்கள்,1
‘ஓம் நமச்சிவாயா சொல்லுங்கள், சுலோகம் சொல்லுங்கள்’ என்று
நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா
சொல்லிச் சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால்
முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லது தான். (நான்
பிழைத்துப் போகிறேனே) ஆனால் இயல்பாய் எனக்கு அந்த
நம்பிக்கை வரவில்லை. இனி, சாகப் போகும்போதா வரப்


1 கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டும்’என்ற
கவிஞர்சுரதாவின் கவிதை சின்ன வயதில் என் நெஞ்சைத்
கவர்ந்த கவிதை. ஆனால் பல கோயில்களுக்குப் போயிருக்கிறேன்,
சில காரணங்களுக்காக. பின்னால் கடவுள் மறுப்பு என்பதில்
தீவிரம் காட்டவில்லை.