பக்கம் எண் :

24

1998 மே 31 ஆம் நாள் நான் ஓய்வு பெற்றேன். மறுநாளே
அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களை ஆசிரியராகக்
கொண்ட ‘ஓம் சக்தி’யில் இணை ஆசிரியராகச் சேர நேர்ந்தது. அந்தப்
பத்திரிகையில் நான் சுதந்திரமாக இயங்க எழுத, நல்ல
எழுத்தாளர்களிடம் கதை, சமூகவியல், இலக்கியக் கட்டுரைகள் வாங்கி
வெளியிட ஆசிரியர் அருட்செல்வரும் பதிப்பாசிரியர் சிதம்பரநாதனும்
தடையாய் இருந்ததில்லை. எனினும் என்னால் தெய்வப்
பக்திக்கட்டுரைகள், திருக்கோயில் விழாக்கள் பற்றியெல்லாம் எழுத
முடியவில்லை. அவற்றைக் கவிஞர் சிதம்பரநாதன் கவனித்துக்
கொண்டார். தனி அறை. தொலைபேசி வசதி எல்லாம் இருந்தது.
எனக்கு வேலைப்பளு இல்லை. அச்சகவேலை, வடிவமைப்பு
போன்றவற்றைப் பார்க்க ஆட்கள் இருந்தார்கள். வாரப் பத்திரிகையாக
இருந்திருந்தால் எனக்கு வேலை இருக்கும். மாதப் பத்திரிகைக்கு
இருவர் தேவையில்லை. எனக்கு பெரிய சம்பளம் கொடுத்தார்கள்.
என் குடும்பச் சூழ்நிலைக்கு வருமானம் தேவைதான். ஆனால்
எனக்கென்னவோ போதிய வேலை பார்க்காமல் சம்பளம் மட்டும்
அதிகம் வாங்குவதாகத் தோன்றியது. ஒரு முதலிளியை ஒரு
தொழிலாளி சுரண்டுவது போல் பட்டது. என்னை அரவணைத்துப்
போற்றும் கவிஞர் சிதம்பரநாதனிடம் மெல்லச் சொன்னேன்.
ஐயாவிடமும் ஒருநாள் பேச்சோடு பேச்சாகச் சொல்லிவிட்டேன்.

இடையில் ஒருநாள் என் பையன் கதிரிடமிருந்து தொலைபேசி
வந்தது, தோழர் பேராசிரியர் கோ. கேசவன் மறைந்து விட்டார் என்று.
உடனே கோவை விஜயா பதிப்பகம் சகோதரர் மு.வேலாயுதம்
அவர்களிடம் ‘தகவலை பலகையில் எழுதி வையுங்கள்’ என்று சொல்லி
விட்டு மதுரை புறப்பட்டேன். மதுரை வரும்போது மணி பத்து.
அதற்குள் அவர் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று
விட்டார்கள். அவருடைய துணைவியாரிடம் துக்கம் விசாரித்துவிட்டு
இரவு ஒரு மணிக்கு சிவகங்கை வந்து படுத்ததுதான். படுத்தது
படுத்ததுதான். மறுநாள்