பக்கம் எண் :

27

எடுத்தாண்ட இரண்டு கவிதைகளும் (கரும்புத் திருவிழா, வள்ளலார்
வருவாரா) இடம் பெற்றுள்ளன. இனனொரு கவிதை ‘மூன்றும் ஆறும்’
தொகுப்பில் உள்ளது.

முன்னாள் சட்டமன்றத் துணைத் தலைவர் திரு. பெ. சீனிவாசன்,
இந்நாள் சட்டமன்றத் தலைவர் னைவர் மாண்புமிகு கா. காளிமுத்து.
ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ போன்றவர்கள் அடிக்கடி
மேடைகளில் முழங்கிய சாகாத வானம் நாம்’ என்று தொடங்கும்
கவிதையும் இதில் உள்ளது.

தி.மு.கழகத்தின் கவிஞனாக இருந்த நான் வெறும் அனுதாபியாக
அல்ல, உறுப்பினராகவும் இருந்தேன். பின்னால் அமைச்சரான திரு.
செ.மாதவன், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. சேதுராமன்
ஆகியோர் வீடுகளுக்கு நான், அண்ணன் மாரிமுத்து (CT வாக
இருந்து இப்போது ஓய்வு பெற்று மதுரையில் இருக்கிறார்) திரு.சிபியன்,
திரு.ஆர்.வி.சாமிநாதன், திரு.சச்சிதானந்தம் முதலானோர் அடிக்கடி
போய் வருவோம். கட்சி நடவடிக்கைகள் குறித்துக்
கலந்துரையாடுவோம்.

சிறுகதை மன்னர் திரு. எஸ்.எஸ். தென்னரசு சிறைக்குச்
சென்றிருந்த போது முன்னாள் மேயர் மதுரை முத்து அச்சகத்தில்
அச்சிடப்பட்ட ‘தென்னரசு’ தழை கவனித்துக் கொள்ளச் சொன்னார்.
முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கவனித்துக் கொண்டார். நான்
கவிதைகள் எழுதிக் கொடுத்தேன்.

1967 தேர்தல் என்று நினைக்கிறேன். கழக வேட்பாளர் திரு. சி.
சேதுராமனுக்காக கவிதை நடையில் எழுதி அச்சிட்ட மூவாயிரம்
துண்டறிக்கைகளை ஒலி பெருக்கியில் தெருத் தெருவாய் வாசிக்கச்
சொல்லி மக்களிடையே வழங்கச் செய்தேன். சிவகங்கை நகரத் தி.மு.க
செயலாராக திரு. திருஞானம் இருந்தபோது - நான் கல்லூரி பி.ஏ.
முதலாண்டு மாணவன் - கட்சிக்