பக்கம் எண் :

29

முடித்துவிட்டு வருமானவரித்துறையில் பணியாற்றினார். ஒரு முறை
ஈரோட்டில் ஒரு கவியரங்கில் கலந்து கொள்ளச் சென்ற போது
சந்தித்தேன். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை).

நான். பி.ஏ. இறுதியாண்டு பயிலும் போது பேராசிரியர் நா.
தர்மராஜன் எனக்கு ஆசிரியராக வந்தார். அவர் பெரியார் வழியில்
புறப்பட்டுப் பின்னர் தீவிர பொதுவுடைமையாளரானவர். நான் தீவிர
தி.மு.க. அதனால் இருவருக்குமிடையே பல தடவை முரண்பாடுகள்
ஏற்பட்டதுண்டு. இருந்தாலும் அவை கவிக்கோவின் கவிதைகளில்
வரும் முரண்பாடுகள் (முரண்தொடை) போல் நயமாய் இருக்கும்.
சண்டை போடுவோம். பிறகு சமாதானமாகப் பேசுவோம். அவர்
தொடர்பால் குறிப்பிட்ட எழுத்துக்களை மட்டும் படித்துக்
கொண்டிருந்த நான் பரவலாகப் படிக்க ஆரம்பித்தேன். ஜனசக்தி,
தாமரை New Age, Main Stream முதலிய பத்திரிகைகளை அவர்
கொண்டு வந்து கொடுப்பார். அவற்றைப் படிப்பேன். அவர்
அறிமுகப்படுத்திய இடது சாரி எழுத்தளார்கள் முல்க்ராஜ் ஆனந்த்,
கிருஷன் சந்தர், கே.ஏ. அப்பாஸ் படைப்புகளை விரும்பிப்
படிப்பேன்.

நான் எம்.ஏ. முடித்துவிட்டு சிவகங்கைக் கல்லூரியில் ஆசிரியரான
பிறகு அரசியலில் இருவரும் வேறுபட்டிருந்தாலும் இருதுருவமாக
இல்லை. பல காரியங்களில் ஒன்றுபட சந்தர்ப்பங்கள் வாய்த்தன. 1973
ஆம் ஆண்டு கல்லூரியில் வெடித்த புரட்சி என்னையும் அவரையும்
ஒரு கூட்டுப் பறவைகள் ஆக்கின.

மாவட்ட, உள்ளூர்ப் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள்
திரு.கூத்தக்குடி சண்முகம், திரு.பி.ஆர். சந்திரன், திரு.வி.ஆர்.
அய்யாத்துரை, திரு. ஜீவாதாசன் ஆகியோர் எங்கள் போராட்டத்தின்
போது