பக்கம் எண் :

36

அண்ணல் அவர்கள் எழுதியிருந்த கவிதைகள் அனைத்தும்
கற்கண்டுகள்.

அறிஞர் அண்ணல் அவர்கள் நம்மிடையே வாழும் மு.வ. எல்லாத்
துறைகளிலும் வைர ஒளி வீசும் நூல்களைப் படைத்த பெருமகன்.
எழுத்தாளர்களில் ஜெயகாந்தனைப் போல் அறிஞர்களில் முனைவர்
தமிழண்ணல் அவர்கள் நல்ல கவிஞர். (அவர் கவிதைகள் விரைவில்
நூலாக வெளிவரவேண்டும்) என் நூல்களையெல்லாம் படித்துப்
பாராட்டியிருக்கிறார். அவருடைய மணிவிழா மலரை முனைவர் இரா.
மோகனுடன் இணைந்து, தொகுக்க வாய்ப்பளித்தார். வள்ளல்
திரு.வ.அருணாசலம் அவர்களின் தமிழ்ச் சான்றோர் பேரவையின்
சார்பில் விருது வழங்கச் சான்றோன் ஆக்கினார்.

‘மீரா கவிதைகள்’ அணிந்துரையில் என்னைக் குறிஞ்சிப் பூவாக்கி
உதகை மலையில் ஏற்றிவைத்துவிட்டார். அவர் அணிந்துரை வந்த
மறுநாள் ‘தினமணி’யில் உதகையில் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக்
குலுங்கும் காட்சியைப் படம் பிடித்துக் போட்டிருந்தார்கள்.

இராசேந்திரன் கவிதைகள் வெளிவந்தபோது அதைப் படித்து விட்டு
கவிஞர் முடியரசனும் அறிஞர் அண்ணலும் இன்னும் சிலரும்
‘பாவேந்தரைக் குறைகூறும் நோக்கில் பேராசிரியர் நா.
இலக்குமணப்பெருமாள் எழுதிய இருதுளிகள் என்னும் மதிப்புரை
உள்ளது.... பாவேந்தரை குருவாக மதிக்கும் நீங்கள் இதை
வெளியிட்டிருக்கக் கூடாது’ என்று எழுதினார்கள்.

இந்த விவாதத்துடன் இந்த முன்னுரையை முடிக்க விரும்புகிறேன்.

காதல் தொடர்பான ஒரு கவிதை. அதில் குருவும் சீடரும்
எப்படி வேறுபடுகிறார்கள் என்று மதிப்பீடு