பக்கம் எண் :

37

செய்திருந்தார். பேராசிரியர் நா. இலக்குமணப் பெருமாள்.
1பாவேந்தரின் ‘தமிழ் வாழ்வு’ என்னும் கவிதையில் தமிழ் இளைஞன்
ஒருவன் எதிர் வீட்டில் உள்ள பெண்ணை மாடியிலிருந்தே சைகை
மூலம் காதலிக்கிறான். ஒருநாள் கிணற்றோரம் வரச் சொல்கிறான்.
(சைகையில்தான்) நேரில் சந்திக்கிறான்.

காதலித்த பெண் தெலுங்கச்சி என்று தெரிந்ததும் அவளை ஒதுக்கி
அத்தை மகளிடம் வருகிறான் அந்தத் தமிழ் இளைஞன்.
தெலுங்கச்சியோ கிணற்றில் வீழ்கிறாள். இது பாவேந்தரின் காதல்
வாழ்வில் காணு ம் சித்திரம். மாறாக, காதலித்த பெண் காதலனிடம்
நான் மலையாளப் பெண்’ என்று தயங்கித் தயங்கிச் சொல்கிறாள்.
அவனோ காதலுக்குச் சாதி மத மொழி பேதம் எதுவும் இல்லை என்று
ஏற்கிறான். இது ‘அங்கே ஆனந்தம்’ என்னும் என் கவிதை. இருவர்
கவிதையையும் ஒப்பிட்டு குருவை மிஞ்சிய சீடன் என்று என்னை ஓர்
அங்குலம் உயர்த்திவிட்டார் பேராசிரியர் இலக்குமணப் பெருமாள்.

அறிஞர்அண்ணல் அன்று (37 ஆண்டுகளுக்கு முன்பு) எழுதிய
கடிதத்தில், இந்த மதிப்பீடு சரியல்ல. பாவேந்தர்


1பேராசியர் நா. இலக்குமணப்பெருமாள் மதுரைத்
தியாகராசர் கல்லூரியில் முதுகலை வகுப்பில் என்னுடனும்
கவிக்கோவுடனும் சேர்ந்து பயின்றவர். நான் பணியாற்றிய
சிவகங்கைக் கல்லூரியிலேயே அவரும் என்னுடன் முப்பது
வருடங்கள் பணியாற்றினார். கடைசிச் சில வருடங்கள்
காரைக்குடிக் கல்லூரிக்கு மாறுதலாகிச் சென்று அங்கிருந்து
ஓய்வு பெற்றார். ‘பாரதியின் ஆன்மிகம்’ குறித்து
ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். ‘சிந்திக்க
விரும்பும் சிலருக்காக’ ‘கடவுள் முதல் கருணாநிதி வரை’ என்ற
இரு அற்புதமான கட்டுரைத் தொகுப்புகளைப் படைத்தளித்தவர்.
‘இலக்கியத் துறையிலிருந்து விமர்சனத் தோணி ஓட்டும் என்
சகோதரர்’ ஒருவர் என்ற கனவுகளில் இவரைத் தான்
குறிப்பிட்டுள்ளேன். என்னைக் காட்டிலும் ஆறுமாதம்மூத்தவர்.
இவரைப் பெயர்சொல்லிக் கூட்பிடமாட்டேன். ‘அண்ணாச்சி’
என்று தான் கூப்பிடுவேன். இப்போது சிவகாசியில் இருக்கிறார்.