பக்கம் எண் :

39

நலன் கருதி பல இடங்களிலும் குற்றியலுகரம் பற்றிக்
கவலைப்படாமல் விட்டிருக்கிறேன். சில இடங்களில் சந்தங்கள்
தடுமாறும். காட்டாக, ‘பிணம் என்று பெயர் சூட்டு’ என்னும்
கவிதையில் ‘தந்து தடுமாறும்’ என்னும் சொல்லாட்சி....
வேண்டுமென்றே சந்தம் ‘தடுமாறச்’ செய்தேன். மரபும் சில
இடங்களில் மீறப்பட்டிருக்கும்.

இந்த மீறல்கள் தாம் எனக்குப் புதுக்கவிதைப் பக்கம் போகத்
துணிச்சலைத் தந்தன.

கவிக்கோ அப்துல் ரகுமான் என் வலதுகண். கவிஞர் சிற்பி என்
இடது கண். தம்பி இன்குலாப் என் இடது கை. தம்பி காமராசன் என்
வலது கை. தம்பி பாலாவும் தம்பி மேத்தாவும் என் இதயத்தின்
இருபக்கம். கவியரசு வைரமுத்து, கவிஞர்கள் தமிழன்பன்
பி.சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்
நாடன், தணிகைச் செல்வன் இந்திரன், காசி ஆனந்தன், நவகவி,
கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாலம், க. வை.
பழனிசாமி, நாஞ்சில் ஆரிது. வைகை வாணன், டி.எம்.அப்துல் காதர்,
இக்பால், பஞ்சு, ரவிசுப்பரமணியன், வசந்தகுமார் - இவர்கள் எல்லாம்
என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள்
என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல; நான்
மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஓர் அவதாரம். ஆமாம்.... நான்
செத்தாலும் வாழவேன்.

ஒரு வேண்டுகோள்.

கனவுகளைப் படித்து என்னைப் போலவே எழுதும் புதுக்
கவிஞர்களே! கனவுகளைப் படித்துக் காதற் கடிதங்கள் எழுதும் நவயுக
இளைஞர்களே! இதோ உங்களுக்காக என் ‘மீரா கவிதைகள்’. இதைப்
படியுங்கள். இதில் உள்ள காதல் கவிதைகளிலேயே நின்றுவிடாமல்