காக்கைக்கு....! தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும் உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்; பாடத் தெரியாப் பறவையே! காக்கையே! காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின் பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன் வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்! என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்? ‘என்னைக்கா’ என்றோ இயம்புவாய்? மாட்டாயே! எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால் உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான் கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக் கா என்பாய் போலும்! கருங்குயிலின் அண்ணனே! |