பக்கம் எண் :

54.மீரா கவிதைகள்

நீ நன்றாய்ச் சொல்கின்றாய்; நீ வாழ்க! உன்கருத்தை
என்மக்கள் உணர்ந்தே எழும்நாள்தான் எந்தாளோ?
பொன்னாள், புதுநாள் புவனத்தில் அந்நாளே!

தான்மட்டும் தின்கின்ற தன்னலமில் லாததனால்
வான்தொட்டு மீள்கின்ற வல்லமைநீ பெற்றாயோ?
உன்னைக்கண் டிந்த உலகம் திருந்தாதா?
என்ன உலகம் - இதில்நான் பிறந்தேனே....!

அன்னத்தைத் தூதாய் அனுப்பினானாம் ஓர் அரசன்;
உன்னை நான் தூதனுப்ப உத்தேசம்; நீ உதவு!
சேரி குறைவற்ற சென்னையில் என்இன்ப
வாரிதியாள் ஏக்கம் வளர்ப்பாள்; அவளிடம் ‘உன்
சிந்தைக் குரியான் சிவகங்கை யில் இருந்து
வந்துகொண் டுள்ளான்; வருந்தாதே; என்று நீ
கூறு! புறப்படு! கூறினால் கூட்டோடு
சோறு படைப்பாள், சுவை!