பக்கம் எண் :

8

துயிலும்பொழு திசைக்கும் இளந்
தோகைமொழி கேட்டுப்
பயிலும் ஒரு கிளியின் மொழி
பண்யாழ்மொழி எல்லாம்
உயிரில் எமதுளத்தில் உரம்
ஊட்டும் தமிழாமோ?

சந்த இனிமைக்கும் பா நடைக்கும் ஒரு காட்டாகத் தக்க
இப்பாட்டுப்போல, இத்தொகுப்பில் உள்ள பல பாக்கள் சுவைஞனின்
உள்ளத்தைத் தொடத்தக்கன.

மீரா மிகமிக அடக்கமானவர். அதனால் இன்றைய அரசியலாரால்
கண்டு கொள்ளப்படாதவர். ‘சினிமா’ வெளிச்சத்தில், துள்ளித் திரியும்
விட்டில்களிடையே, இவர்தம் பாடல்கள் ‘கற்று அடங்கல்,
ஆற்றுவானது செவ்வி உடையன.

அறம் காத்திருந்து பார்ப்பதுபோல இக்கவிதைகளும் காலம்
கடந்தாலும் மக்களால் கண்டு கொள்ளப்படும் என்பது உறுதி.

ஏரகம்
சதாசிவ நகர
மதுரை

தமிழண்ணல்