பக்கம் எண் :

7

எழுந்தருளவில்லை. திருடர்கள் கொள்ளையடித்துக் கொண்டு
ஓடிவிட்டனர்.

கடவுளை நம்பி மனிதரை அவமதிக்கக் கற்பிக்கும் சிலரின்
முகத்தில் ஓங்கி அறையாமல் அறைகிறது இக்கவிதை. அப்படியே
கடவுள் துணை செய்ய வந்தாலும் மனித வடிவிலேதான் வருவார்
என்பதையும் இது போதிக்கிறது.

இத்தகைய நகைச்சுவை ததும்பும் அங்கதப் பாடல்களால், இன்றைய
அழுகிவரும் அரசியலையும் குத்திக் குத்திக் குடலைப் பிடுங்கிக்
காட்ட வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா.

வெள்ளம் வரும்போது வையைக் கரைகள் பூத்துக் குலுங்குவதை,
‘கோடிப்பூ மாநாட்டு மேடை’ எனப்பாடும் மீரா, இன்றைய
திரையிசையில்,’ ஓஓ இதுதான் அழகின் மாநாடா’ எனப்
பாடுவதற்குக் கைகாட்டியதுபோல் படுகிறது.

தமது ஆசிரியர் அ.கி. பரந்தாமனாரை இவர் ‘புலமைச் சிங்கம்’
எனப் பாடியிருப்பது பாராட்டுக்குரியது. ‘ஞானப் பெண்ணே’ என
முடியும் பாடல்கள் சில, சித்தர்களை நினைப்பூட்டுகின்றன,
கருத்தாலும் கற்பனையாலும்!

‘தலைவா, என் தலைவா’ என்று இவர் அறிஞர் அண்ணா
அவர்களைப் புகழ்ந்து பாடியிருப்பன ஒவ்வோரடியும், மிகப்
பொருத்தமானவை; பொலிவு மிக்கவை!

சிவகங்கை மன்னர் மறைவின்போது இவர் பாடியிருப்பவை, சங்க
காலம் முதல் இன்றுவரை பாடப் பெற்ற கையறுநிலைப் பாடல்களுக்கு
ஒரு மகுடம் சூட்டுகிறது. கண்ணீர்த் துளிகளை வரைபடமாக்கலாம்,
வார்த்தை வடிவாய் ஓவியமாக்கலாம் என்பதற்கு இப்பாட்டு நல்ல
எடுத்துக்காட்டாகிறது.

குயிலின்மொழி குழலின்மொழி
குழந்தைமொழி, கட்டில்