பக்கம் எண் :

மீரா கவிதைகள்.91

கொடுத்ததைத்தான் கேட்கின்றேன்; கடனாய் நேற்றுக்
கொடுத்ததைத்தான் கேட்கின்றேன்; கன்னத்தில் நான்
கொடுத்ததைத்தான்....” என்றுரைத்தேன். “அதுவா... ஆமாம்
குழந்தைகுயி லிடம்பள்ளி போகும் போது
கொடுத்தேனே! திரும்பிவந்து அப்பா வுக்குக்
கொடு, தேனே! என்றேனே! ஓகோ! இன்னும்
கொடுக்கவில்லை யா அந்தக் குறும்புக் காரி?
கூப்பிட்டுக் கேட்கின்றேன்” என்றாள்! சென்றாள்!

‘தென்னரசு’
இதழில் வெளிவந்தது. அக்டோபர் 1964