மோச மிகுந்த பகட்டுடை வாழ்க்கையில் மோகம் வைத் தேஇந்த மோசமுற்றோம்! 3சுத்த உணவிலும் சுத்த உடையிலும் சொன்ன விதிகளை விட்டு விட்டோம்; நித்தங் குளிப்பதும் பத்தியங் காப்பதும் மெத்தக் குறைந்தது தேசத்திலே, 4 காலையி லெழுந்து நீராடல் கொஞ்சம் கர்த்தனை யெண்ணித் துதிபாடல் மாலையி லோடி விளையாடல் இந்த மார்க்கத்தை விட்டனர் மக்களெல்லாம். 5 அளவை யறிந்து புசிப்பதில்லை தங்கள் அளவை யளந்து வசிப்பதில்லை களவுக்குப் பின்னால் கதவை அடைப்பவர் காரியம் போலடி கண்மணியே! 6 நல்ல வழக்கங்கள் உள்ளவர் தங்களை நாடுமோ நோய்களும் எந்நாளும்? நல்ல வழக்கங்கள் நாளும் வளர்ந்திட நாடு செழித்திட வேணுமடி. 7 77. தீர்க்கதரிசி பல்லவி தீர்க்க தரிசிசொன்ன மார்க்க மதனைவிட்டுத் திரும்புவ தென்ன மனமே! (தீர்க்க) அநுபல்லவி பார்க்குள் பெரியவர்கள் பார்த்த அனுபவத்தைக் காக்கும் படியுதித்த காந்தி யெனும்பெரிய. (தீர்க்க) |