புலவர் சிவ. கன்னியப்பன் 145

தந்தை சொல் மிக்கதொரு மந்திரம் இல்லையென்ற
தசரத ராமபிரான் நிசமிகும் நேமம் ஒன்றும்
சிந்தையில் கஸ்தூரிபாய் சீதை சிறப்பு பொங்கும்
சிறுமைகள் விட்டொழியும் பெருமை நிரம்பித் தங்கும்.       (நினை)3

88. நிலைகொண்ட மெய்ஞ்ஞானக் கலை தந்தவர்

பல்லவி

நிலைகொண்ட மெய்ஞ்ஞானக் கலைதந்த காந்திக்குச்
சிலைவைத்து விட்டால்மட்டும் சிறப்பாமோ?       (நிலை)

அநுபல்லவி

அலைகொண்ட நம்மனத்தில் அவன்கொண்ட செம்மைதங்கி
அதன்படி நடப்பது அதுவன்றோ இனிவேண்டும்?       (நிலை)

சரணங்கள்

அச்சிட்டுப் புத்தகத்தில் மெச்சிப் புகழ்ந்துகொட்டி
ஆலயம் கட்டிவைத்துக் கோலங்கள் செய்துவிட்டு
நச்சிட்ட ஆசைகளால் நாளும் அலைந்துழன்றால்
நமக்குத்தான் பயன்என்ன? நாட்டுக்கும் என்ன நன்மை?       (நிலை)1

பொன்னால் உருவம் செய்து மணிகள் புதைத்திழைத்து
பொழுதுக்கும் முன்நின்று தொழுதாலும் பயன்என்ன?
எந்நாளும் காந்தி வாழ்வை இதயத்தில் வைத்துயார்க்கும்
இம்சை செய்யாதிருந்தால் நம்செயல் அதுபோதும்.       (நிலை)2

குணங்கள் உயரவன்றே கோயில்கள் கட்டினோம்
கும்பிட்டு விட்டுநித்தம் வம்பிட்டு வாழ்வதுபோல்
குணமென்னும் நலமெல்லாம் குடிகொண்ட இந்நாட்டில்
குலதெய்வம் காந்திக்குச் சிலைமட்டும் போதாது.       (நிலை)3