வெண்ணெய் ரொட்டி ஊட்டுவார் வேறே அன்பும் காட்டுவார் மண்ணில் இந்த மடமைகள் மாறும் காலம் அடைவமோ? 6 மண்டை வந்த நாளிலே மரணம் உண்டு தோளிலே சண்டை போடத் தூண்டித்தான் சாகச் சொல்ல வேண்டுமா? 7 குண்டு போட யுத்தமா? கொல்லக் கூட வித்தையா? மண்ட லத்தில் போரையே மறந்து போக நேருமா? 8 வெற்றி வெற்றி என்பரேல் வெற்றி பெற்ற தென்னவோ? சுற்று முற்றும் பாரெலாம் சூரை யான ஊர்களும் 9 பெற்ற தாய்கள் ஓலமும் பேய்பு குந்த கோலமும் இற்றொ ழிந்த சுற்றமும் இவைக ளேநம் வெற்றிகாண்! 10 துன்பம் வெற்றி பெற்றது துயரம் வெற்றி பெற்றது வம்பு தும்பு சூதுகள் வறுமை வெற்றி பெற்றன. 11 அன்பின் வெற்றி அல்லவே அறிவின் வெற்றி அல்லவே இன்ப மென்று நாமறிந்த எதுவும் வெற்றி பெற்றதா? 12 |