மாதர்தம்உடலைக் கண்டு மதிமோசம் போக வேண்டாம் ஓதிடும் அழகும் மார்பும் ஒய்யார இடையும் எல்லாம் பேதுறும் தசையே யன்றிப் பிறிதொன்றும் இல்லை; இந்தத் தீதறும் உண்மை ஓர்ந்து தீர்மானத் தெளிவு கொள்வாய். 3 பிறந்தனஉயிர்களெல்லாம் நிச்சயம் பிணமாய்ப் போகும் உறைந்துதா மரைஇ லைமேல் உருளு நீர்த் துளியே போல நிறைந்துள உலக ஜாலம் நிலையற்ற நீர்மைத் தாகும்; வெறுந்துயர், பற்றும் நோயும் விளைவன்றி வேறொன் றில்லை. 4
வருமானம் உள்ள மட்டே பரிவாரம் வந்து சேரும் விரிவாகும் க்ஷேம லாப விசாரணை வெளிவே ஷம்தான்; பருமானப் பலமுண் டாகில் பந்துபாத் தியமும் உண்டாம் உருமாறிக் கிழமாய் விட்டால் உன்னையார் கேட்பார் பிள்ளை? 5 பேச்செல்லாம் பேசி மிக்க பெருமிதம் அடைவ தெல்லாம் மூச்சுள்ள வரையே; தேகம் முடங்கிய பிணமாய் விட்டால் கூச்சின்றி உன்னை முன்னே சுயம்வரம் கொண்ட காதல் நாச்சியும் அச்சம் கொள்ளாள் நாறுடல் அதனைக் கண்டே. 6 |