296நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வேலை யற்ற கோடி மக்கள்
       விளைச்சல் செய்ய முந்துவார்.
களைவி ழுந்து தரிசு பட்ட
       கோடி கோடி காணிகள்
களிசி றக்கச் செழுமை பெற்றுக்
       கதிர்கள் முற்றும் காணலாம்.       8

காந்தி சொன்ன ராம ராஜ்யம்
       காண வல்ல தலைவனாய்க்
கர்ம பக்தி, ஞான யோகம்
       கருதும் புத்தி நிலையனாய்ச்
சாந்த சத்தி யாக்ர கத்தின்
       சாட்சி யாம்நம் வினோபா
சாற்று கின்ற பூமி தானம்
       சோற்றுப் பஞ்சம் மாற்றுமே.       9

விரதமாகக் காந்தி யண்ணல்
       விட்டுப் போன வேலையை
விட்டி டாமல் கட்டிக் காக்கும்
       வீறு கொண்ட சீலனால்
பரத நாட்டின் தர்ம சக்தி
       பாரில் எங்கும் சூழவே
பகையில் லாமல் யுத்தம் என்ற
       பயமில் லாமல் வாழலாம்.       10

தெய்வ ஜோதி காந்தி யண்ணல்
       தேர்ந்தெ டுத்த சீடனாம்
திருவி னோபா பாவே நமது
       தேச நன்மை நாட்டினார்.
வையம் எங்கும் பெருமை பெற்ற
       வண்மை மிக்க தமிழகம்
வந்து பூமி தானம் வாங்க
       வரவு சொல்லி வாழ்த்துவோம்.       11