புலவர் சிவ. கன்னியப்பன் 301

அழுதிடும் மக்களும் தொழுதிடும் மனைவியும்
       ஐயா! பசியுடன் காத்திருக்க.
பொழுதுக்கும் உழைத்தது முழுவதும் கூலியைப்
       போதையில் இழப்பதும் இனியில்லை.       (விட்)5

பெற்றதன் குழந்தைகள்சுற்றி நடுங்கப்
       பேயெனும் உருவொடு வாய்குறை
உற்றவர் உறவினர் காறி உமிழ்ந்திட
       ஊரார் நகைப்பதும் ஒழிந்ததினி.       (விட்)6

விடிகிற வரையிலும் அடிதடி ரகளை
       வீதியில் மாதர்கள் ரோதனமும்
குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
       கூண்டோ(டு) ஒழிந்தன இனிமேலே!       (விட்)7

எல்லா விதத்திலும் கள்ளால் வரும்பணம்
       ஏளனத் துக்கே இடமாகும்;
நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
       நம்மர சுஅடைந்திட்ட பழிநீங்கும்.       (விட்)8

போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
       புத்தி யுடைஓர் அரசர் ஆமோ?
பேதைக ளாக்கிப்பின் பிழைபுரிந் தாயெனல்
       பேச்சுக் காகிலும் ஏச்சன்றோ?       (விட்)9

காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது;
       காங்கிரசு ஆட்சியும் ஓங்கிடுமே;
போந்தது புதுயுகம்; தீர்ந்தது கலிபலம்;
       பூமிக் கேஒரு புதுமையிது!       (விட்)10

சக்கர வர்த்திநம் ராஜா ஜீக்கொரு
       சன்மா னம்நாம் தந்திடுவோம்;
அக்கரை யோடவர் ஆணைப் படிகள்ளில்
       ஆசை புகாவிதம் காத்திடுவோம்.       (விட்)11