புலவர் சிவ. கன்னியப்பன் 305

தேம்பிடும் கைத்தறி நெசவாளர்
திடமுறச் செய்திடும் கூட்டுறவு.       3

வாணிபம் பெருகிடும் கூட்டுறவால்
       வளப்பம் மிகுந்திடும் விவசாயம்
நாணய நடத்தைகள் அதிகரிக்கும்
       நம்பிக்கை வளர்ந்திடும் கூட்டுறவால்.       4

பண்டக சாலைகள் நிறைவாகும்;
       பணமுடை என்பது குறைவாகும்;
கொண்டுள, காரியம் எதுவெனினும்
       கூட்டுற விருந்தால் அதுமுடியும்.       5

அன்பு புலப்படும் கூட்டுறவால்
       ஆட்சி பலப்படும் கூட்டுறவால்
தென்பு மிகுந்திடும் யாருக்கும்
       தேசம் உயர்த்திடும் பாருக்குள்.       6

கூட்டுற வென்னும் கொள்கையினைக்
       குற்றமில் லாமல் மேற்கொண்டால்
நாட்டில் தரித்திரம் நீங்கிவிடும்
       நம்முடை சுதந்தரம் ஓங்கிவிடும்.       7

192. யார் தொண்டன்?

தொண்டு செய்யக் கற்றவன்
       துயரம் போக்கும் உற்றவன்
சண்டைப் போடும் மக்களைச்
       சரச மாக்கி வைக்கவே.       (தொண்)1

தீர வாழ்வு சொல்லுவான்
       தீமை யாவும் வெல்லுவான்
ஈர மற்ற செய்கைகள்
       வீர மென்றல் பொய்யென.       (தொண்)2