330நாமக்கல் கவிஞர் பாடல்கள்

இந்திய நாட்டில் இப்போது இல்லை
இலக்கிய ஞானம் இணையிலா ஒருவன்
கல்வியே வேண்டாக் காரியம் செய்வதும்,
கணித சாத்திரம் கைதேர்ந்த ஒருவன்
எண்ணிக்கை வேண்டா வேலையில் இருப்பதும்.       10

ரசாயனத்திலே ரசனை மிகுந்தவன்
கச்சேரி மேசையில் கவிழ்ந்து கிடப்பதும்
சங்கீத வித்தையில் சமன்இலாக் கலைஞன்
தபால் ஆபீஸ் தந்திய டிப்பதும்,
சித்திரக் கலையில் கைத்திறம் சிறந்து       15

‘பத்திரம், ரிஜிஸ்டர்‘ பதிவு செய்வதும்,
சத்தியம் தவறா உத்தம குணவான்
வக்கீல் தொழிலில் வருத்தப் படுவதும்,
கொல்லா விரதமே கொண்டுள ஒருவன்
பட்டாள வீரனாய்ப் பதிந்து கொள்வதும்,       20

விஞ்ஞா னங்களில் விருப்புள இளைஞன்
‘டிக்கட் கலெக்டராய்‘த் திண்டாட நேர்வதும்,
புத்தகம் படிப்பதில் பித்துள்ள புலவன்
‘புக்கிங் கிளார்க்‘காய்ப் புழுங்கு கின்றதும்,
உருட்டி மருட்டத் தெரியா ஒருவன்              25

போலீஸ் காரனாய்ப் பொழுதுபோக் குவதும்,
திட்டிப் பேசவும் தெரியா நல்லவன்
அமீனா வேலையில் அடிபட்டு வருவதும்,
கள்ளுச் சாராயம் கடுந்திடும் கருத்தன்
கலால் வேலையில் ‘டிகிரி‘ கணிப்பதும்,       30

மாமிச உணவை மறுக்கும் மனத்தன்
ஆட்டுக் கறியையும் மாட்டுக் கறியையும்,
சுத்தம் பார்த்தலில் முத்திரை குத்தலும்,
இப்படிப் பற்பலர் இடந்தடு மாறுவர்.       34