332நாமக்கல் கவிஞர் பாடல்கள்


       சிறியதோர் நோய்வந் தாலும்
              தாங்கிடத் திறன்இல் லாமல்
நடைபிணம் போல நாமும்
              நாள்கழித் திருந்தோம் ஐயோ
       நாடிலோம் இதனை மாற்ற
              நல்வழி என்ன வென்று
மடமையோ மதியோ அன்று
              விதியெனும் மயக்கந் தானோ
       மாற்றநாம் அல்ல என்றால்
              மதியினால் பயன்தான் என்ன?       3

முற்றிய ஒழுக்கத் தாலும்
       முறைதெரி வாழ்க்கை யாலும்
பெற்றவர் காண முன்னாள்
       பிள்ளைகள் இறந்தது இல்லை;
கற்றவர் பெரியோர் நித்தம்
       கதைகளிற் சொல்லக் கேட்டோம்
இற்றைநாள் கோடி கோடி
       பிறக்குமுன் இறப்பது ஏனோ?       4

மணத்தையே விரும்பி யோடி
       மலரினைக் காக்கு வார்போல்
பணத்தையே பெரிதென்று எண்ணிச்
       சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
       குரங்கினைக் கொண்டார் போல
இனத்தையே பிணிகள் வாட்ட
       இருந்தனம் அறிவு இருந்தும்.       5

உண்டியில் ஆசை வைத்தோம்
       ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டுகள் மக்கள் தம்மை
       வளர்த்திடும் முறைமை பேணார்