‘இன்றுனக்கு உற்ற துன்பம் எனக்குறச் செய்வேன்‘ என்று தன்மகன் உயிரைக் கன்றின் உயிருக்கே ஈடாய்த் தந்து வென்றிகொள் நீதி மன்னன் வேறுஎந்த மொழியில் உண்டு? 3 கொண்டவன் அயலூர் போகக் குலமகள் தனித்த வீட்டை அண்டினர் கதவைத் தட்டில் கரத்தினை அறுப்போம் என்று விண்டதை மறந்து செய்த குற்றத்தால் விதித்த வாறே தண்டனை தனக்கே தந்த மன்னனும் தமிழ னாகும். 4 திடமிகும் தெய்வ பக்தன் தீவிர தேச பக்தன் கடமையும் தீர வீரக் கருணைசேர் கட்ட பொம்மன் ‘அடிமையாய் வாழ மாட்டேன் அன்னியர்க்கு அஞ்சேன்‘ என்று கொடுமையை எதிர்த்து நின்ற கொள்கையும் தமிழன் கூற்றாம். 5 உள்ளமும் உடலும் கூம்ப உலகெலாம் வணங்கும்சோதி வள்ளல்அக் காந்தி செய்த அறந்தரு வாழ்க்கை முற்ற தளளரும் அறங்க ளாகத் தமிழ்த்திருக் குறளில் முன்பே வள்ளுவன் வாழ்ந்து சொன்ன கொலைதவிர் வாய்மை ஆகும். 6 |