புலவர் சிவ. கன்னியப்பன் 373

சமயம் என்றும் சாதி என்றும்
              சண்டை யற்று வாழவும்
       சமதை யாக மொழிகள் யாவும்
              சலுகை பெற்று வளரவும்
அமைதி யாக தேச சேவை
              அச்சம் இன்றி ஆற்றுவோம்;
       அவதி மிக்க ஏழை மக்கள்
              வறுமை போக மாற்றுவோம்;
நமது நாடு உலகி னுக்கு
              நல்ல மார்க்கம் காட்டவே
       நாங்கள் என்றும் பணிபு ரிந்து
              வெற்றி மாலை சூட்டுவோம்.       2

முன்னி ருந்த நமது நாட்டின்
              முனிவர் கண்ட ஞானமே
       முற்றும் இந்த உலகி னுக்கும்
              உற்ற நன்மை யானது.
என்ன துன்பம் எந்த வேளை
              எங்கு அடுத்த போதிலும்
       எந்தை காந்தி தந்த சாந்த
              மந்தி ரத்தை ஓதுவோம்;
தன்ன லம்மற றந்து நாட்டின்
              தன்ன லத்தைத் தாங்கவும்
       தரணி தன்னில் யுத்தம் என்ற
              இரணப் பேச்சு நீங்கவும்
மன்னன் இந்த பரத நாட்டின்
              மகிமை காக்கும் ஜவகர்லால்
       மாசி லாத சேவை செய்து
              பேசும் நீதி தவறிடோம்.       3

குறிப்புரை:- அவதி - துன்பம்; தரணி - உலகம்; மாசு - குற்றம்.