புலவர் சிவ. கன்னியப்பன் 379

புதுமை யானகொடி பாரீர் - வேறு
       பூத லத்திலிலை தேரீர்
முதுமை யாய்எவர்க்கும் பொதுவாம் - வாழ்வின்
       முறையைக் காட்டுவதும் இதுவாம்.       (கொடி)2

பச்சை யானஒரு தோற்றம் - நமக்குப்
       பக்தி வேண்டுமெனச் சாற்றும்;
இச்சை யானபொருள் கூடப் - பக்தி
       இருக்க வேணும்அதை நாட.       (கொடி)3

துய்ய வெள்ளைநிறக் காட்சி - உண்மை
       துலங்கும் என்பதற்குச் சாட்சி
மைய மாகநிற்கும் மர்மம் - சத்தியம்
       மதங்கள் யாவினுக்கும் தர்மம்.       (கொடி)4

துறவின் வர்ணம்அந்தக் காவி - உலகின்
       துக்கப் பூட்டினுக்குச் சாவி;
சிறையும் வீடும்அதற்கு ஒன்றே - என்னும்
       சேதி ஓதுவதற்கு என்றே.       (கொடி)5

நடுவில் சாட்டையொன்று பார்ப்போம் - அதில்
       நலிந்த போர்க்குக்கஞ்சி வார்ப்போம்
வடுவி லாததொழில் நூற்றல் - குடிசை
       வாழும் ஏழைக்குஎன்று சாற்றல்.       (கொடி)6

பக்தி, சத்தியம், தியாகம் - இவற்றின்
       பண்பே வாழ்க்கையின் யூகம்
நித்தம் நித்தமிந்த நீதி - தம்மை
       நீட்டும் இக்கொடியின் சோதி.       (கொடி)7

ஜாதி பேதம்அதில் இல்லை - மற்றும்
       சமய பேதம்அதில் இல்லை
நீதி யானபல முறைகள் - நமக்கு
       நிலைய மாகும் அதன் குறிகள்.       (கொடி)8