தந்திரங்கள் மிகப்பயின்றும்தருவது என்ன? தரணியெங்கும் பல்கலைகள்தழைத்தும் என்ன? சிந்தனையில் கருணைமட்டும் இல்லை யானால் சீரழியும் உலகம்என்றசேதிக்கு என்றே வந்துதித்துத் திருவருளை வாழ்ந்து காட்டும் வள்ளல் எங்கள் காந்திவழிவாழ வேண்டும். 2 மந்திரிகள்தந்திரிகள் மலிந்தால் என்ன? மண்டலத்தைஒருகொடிக்கீழ் ஆண்டால் என்ன? அந்தரத்தில் தோன்றுகின்ற அனைத்தும் வென்ற அண்டம்எலாம் நமதுஆட்சிஆனால் என்ன? எந்தஒரு உயிரிடத்தும் கருணை காட்டும் இரக்கம்ஒன்றே இவ்வுலகைவாழ வைக்கும் அந்தஒரு அறிவினுக்கே உடலம் கொண்டோன் ஐயன்எங்கள் காந்திநாமம்வாழ்க! வாழ்க! 3 விஞ்ஞானச்சக்திகளால் வென்றால் என்ன? விதம்விதமாய்ச்சுகப்பொருள்கள் விரிந்தால் என்ன? இஞ்ஞாலத்(து) உயிர்கள் எல்லாம் மகிழ்ந்துவாழ இம்சையற்ற சமுதாயம்வேண்டு மானால் பொய்ஞ்ஞான மதவெறிகள் போக வேண்டும் பொறுமைதரும்கருணைஒன்றே பொருளாம் என்ற மெய்ஞ்ஞானம் நமக்குவர வாழ்ந்து சென்ற மேதையெங்கள் காந்திமகான்நாமம் வாழ்க! 4 எண்ணரியதேசபக்தர் உயிரை ஈந்தே எத்தனையோ துன்பம்எல்லாம் சகித்த தாலே மண்ணுலகில் வேறுஎவரும் அறியா நல்ல மார்க்கத்தால்விடுதலையை மலரச் செய்தோம்; புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப் புவியெங்கும் சாந்தவழிபோதம் காட்ட அண்ணல் எங்கள் காந்திமகான் திருநா மத்தை அனுதினமும்போற்றிசெய்ய அருள்வாய் தேவா!5 குறிப்புரை:-இஞ்ஞாலம் - இவ்வுலகம்; அறநெறி - தர்மவழி; சீரழியும் - கெடும்; மார்க்கம்- வழி; அனுதினமும்- நாள்தோறும். |