ஏசு தமிழரலர் என்றகா ரணத்தால் இகழ்ந்து விடுவதில்லை தமிழ்நாட்டார்; பேசும் தமிழருள் கிறித்துவைப் போற்றும் பெருமை யுடையவர்கள் பலபேர்கள். (தமிழா)4 மகமது பிறந்தது மற்றொரு தேசம்அவர் மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில்; அகமகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை ஆரார் தொழுகிறார் அறியாயோ? (தமிழா)5 உலகின் மதமெலாம் ஒவ்வொரு காலத்தில் ஓடிப் புகுந்ததிந்தத் தமிழ்நாட்டில்; கலகம் சிறிதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக் காத்து வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார். (தமிழா)6 தன்னுயிர் நீப்பினும் பிறர்கொலை அஞ்சிடும் தருமம் வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார்; மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல் மண்டிக் கிடப்பதுன்றன் தமிழ்மொழியே. (தமிழா)7 கொல்லா விரதமே நல்லார் வழியென்று கூறி நடந்தவுன்றன் குலமுன்னோர் எல்லா விதத்திலும் எவரும் மதித்திடும் ஏற்ற முடையதுன் இல்லறமாம். (தமிழா)8 உலகம் முழுவதும் கலகம் உறுதுபார்! உன்பெருங் கடமைகள் பலவுண்டு; விலகும் படிசெய்யும் வெறிகொண்ட பேச்செல்லாம் விலக்க விழித்தெழு வாய்தமிழா! (தமிழா)9 இந்திய தாய்மனம் நொந்து கிடக்கையில் இனமுறை பேசுகின்றார்! இழிவாகும்; அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன் அன்பை நிலைநிறுத்(து) அகிலமெல்லாம். (தமிழா)10 |