எண்ணில்அகிம்சை அறநெறியை இவன்போல் நடத்திய பிறர் அறியோம். 2 கோபம்எதிலும் கொள்ளாது கொண்டவர் தமையும் எள்ளாது பாபம் என்றதைப் புரியாது பகவான் சிந்தனை புரியாமல் தீபம் போல்அருள் ஒளிவீசும் திருந்திட வேநன் மொழிபேசும் சாபம் நீக்கிய காந்திமகான் சத்தியச் சுதந்தரச் சாந்தநெறி. 3 அச்சம்என்பதை அறியாது ஆசை எதிலும் குறியாது துச்சம் தனதுயிர் எனவெண்ணித் துன்பம் நீக்கிடத் துணைபண்ணும் பச்சைக் குழந்தையின் களிப்போடும் பழுத்தநற் கிழவரின் விழிப்போடும் விச்சை புரிந்தது காந்திமகான் விடுதலை தரவரும் சாந்தவழி. 4 கோழைத்தனம்அதில் கிடையாது கொள்கையில் சோர்வு அடையாது வாழைக் கனியினும் மென்மையது வயிரம் உருக்கெனும் வன்மையது கூழைக் கும்பிடு போடாது கொச்சை வெற்றிகள் நாடாது ஏழை எளியவர் குறைநீக்கும் எண்ணம் ஒன்றே அதன்நோக்கம். 5 விஞ்ஞானத்தின் வேகத்தால் விரிந்துள எந்திர மோகத்தால் அஞ்ஞா னங்கள் மிதமிஞ்சி அழித்திடு மோதமை என அஞ்சும். |