446நாமக்கல் கவிஞர் பாடல்கள்

புலன்களை ஆண்டிடச் சக்திவரும்
பொய்களைத் தாண்டிடப்புத்திதரும்
நலன்களைத் தனக்கே கோராது
நாட்டினுக்கு உழைத்திடச்சோராது.7

தேவைகள் யாவும் சுருங்கிவிடும்
தெய்வ சிந்தனைநெருங்கிவரும்
சேவைகள் செய்திடப் பணிவுதரும்
சினம்முதல் தீமைகள்துணிவுபெறும்.8

வேலைகள் செய்திடத் தயங்காது
வீணர்கள் சுகம்பெறமயங்காது
கூலியைப் பெரிதென நாடாது
குறைந்திட நேரினும்வாடாது.9

துன்பமும் இன்பமும் மருட்டாது
தூரமும் காலமும்வெருட்டாது
அன்புடை வாழ்வே குறியாகும்
அருளை அறிந்திட நெறியாகும்.10

எல்லா உயிர்களும் சுகம்பெறவே
எண்ணுதல் ஒன்றேஅகம்பெறுவோம்
வல்லான் நினைவே சூழ்ந்துவிடும்
வாய்ந்திடும் பணிசெய்துவாழ்ந்திடுவோம்.11

273. பெரியோர்

மடங்கிய பயிர்கள் எல்லாம்
மழைவரநிமிர்ந்து நீளும்;
மருண்டிடும் குழந்தைபெற்ற
மாதினைக்கண்டு தேறும்;
ஒடுங்கிய தேகம் தக்க
உணவினால்உறுதி கொள்ளும்;
ஒளிந்திடும் நாகம்நல்ல
ஓசையால்வெளிவந்(து) ஆடும்;