கர்மத் தவநெறி காட்டினான் - நல்ல காரியம் வீரியம் ஊட்டினான்; மர்மம், பலிதரும் பூசைகள் - இந்து மதமல்ல என்றுண்மை பேசினான். 4 ‘உலகை வெறுத்துத் துறந்தவர் - தெய்வ உள்ளக் கருத்தை மறந்தவர் கலக நடுவிலும் தங்குவேன்‘ - என்று கர்ஜனை செய்திட்ட சிங்கமாம். 5 பெண்ணின் பெருமையைப் போற்றினான் - ஆண்கள் பேடித் தனங்களைத் தூற்றினான் மண்ணின் சுகங்களை விட்டவன் - ஏழை மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான். 6 ஏழையின் துன்பங்கள் போக்கவும் - அவற்(கு) எண்ணும் எழுத்தறி வாக்கவும் ஊழியம் செய்வதே ஒன்றுதான் - தேவை உண்மைத் துறவறம் என்றுளாம். 7 தேசத் திருப்பணி ஒன்றையே - உண்மை தெய்வத் திருப்பணி என்றவன்; மோசத் துறவுகள் போக்கினான் - பல மூடப் பழக்கத்தைத் தாக்கினான். 8 அடிமை மனத்தை அகற்றினான் - உயர் அன்பின் உறுதி புகட்டினான் கொடுமை அகற்றிட முந்திடும் - தவக் கூட்டத்தை நாட்டுக்குத் தந்தவன். 9 ஐம்பது வருடங்கள் முன்னமே - செல்வ அமெரிக்கச் சிக்காகோ தன்னிலே நம்பெரும் இந்திய நாட்டவர் - கண்ட ஞானப் பெருமையைக் காட்டினான். 10 |