88நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்
       சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை.       1

சுழிந்தோடி மடுக்கள்மிகும் உலகநடைச்
       சுழல்கள்பல நீந்தி ஏறி
வழிந்தோடும் மலையருவிச் சுழல்விழுந்து
       கரையேற மாட்டாய் ஏனோ!
கொழுந்தோடிப் படர்கலையின் குளிர்ஞானக்
       குன்றே! ஓர் குன்றி னின்றும்
ஒழிந்தோடி மறைந்தனையே! உடன்போந்த
       சிறுவர்களின் உணர்ச்சி ஓட.       2

தேனூட்டும் தென்மொழியும் தெருளூட்டும்
       வடமொழியும் தெளியத் தேர்ந்து
மேனாட்டுப் பன்மொழியும் மிகக்கூட்டிக்
       கடைந்தெடுத்த அறிவை யெல்லாம்
தாய்நாட்டின் விடுதலைக்கே தனிநாட்டித்
       தவம்புரிந்த தகைமை யாளா!
வானாட்டிற் சிறந்ததென்பாய் தமிழ் நாட்டை
       விட்டுப்போய் வாழ்வ தெங்கே?       3

‘ஐயரெனில் அந்தணராய் அனைத்துயிர்க்கும்
       செந்தண்மை அருள்வோர்‘, என்று
செய்யதிரு வள்ளுவனார் செய்தமொழித்
       திருக்குறளின் சீல னாகி
மெய்யறிவைப் பெறநாடி மெய்வருந்திப்
       பொய்வெறுத்த மேன்மை யாலோ
‘ஐயா‘ என்று தனியுரைத்தால் உனையன்றித்
       தமிழுலகம் அறியா தையா!       4

முழுமதி மயிர்த்தா லன்ன
       முகந்திகழ் கருணை நோக்கும்
மூர்க்கரும் நேரிற் கண்டால்
       முகந்திடும் சாந்த வீ்ச்சும்