புலவர் சிவ. கன்னியப்பன் 117

தேனிருக்கும் தமிழுக்கோர் கவிஞ னாகித்
       திகிழ்கின்ற இலக்கியங்கள் பலவும் செய்தான்.       3

இல்லறமோ துறவறமோ எதற்கா னாலும்
       எல்லார்க்கும் யோகமுறை இருக்க வேண்டும்
அல்லல்தரும் பிணியேதும் அணுகா வண்ணம்
       ஆரோக்ய வாழ்க்கைபெறும் அறிவை யூட்டும்
நல்லதொரு யோகநெறி சமாஜம் தன்னை
       நடத்திடவே நாடிநிற்கும் சுத்தா னந்தன்
வல்லமைகள் மிகச்சிறந்து மெய்ஞ்ஞா னத்தின்
       வழிகாட்ட நீடூழி வாழ்க மாதோ.       4

குறிப்புரை:-அல்லல் - துன்பம்; சேவை - தொண்டு; ஊன் - உடம்பு.

61.வாழ்க ராஜாஜி

சாதிமதச் சழக்குகளைக் கடந்து நிற்போன்
       சமதர்ம சன்மார்க்க சாந்த சீலன்
நீதிநெறி முறைதெரிந்த நேர்மை யாளன்
       நிந்தையற்ற வாழ்க்கைதரும் நியம முள்ளோன்
ஓதிஉணர்ந் தச்சமற்ற உண்மை கூறி
       உலகநலம் காப்பதற்கே உழைக்கும் யோகி
மேதினியில் அறிவறிந்த மக்கள் யாரும்
       மெச்சுமெங்கள் ராஜாஜி மேதை வாழ்க!

கூரிய அறிவால் கொண்ட
       கொள்கையின் உயர்வால் கூறும்
சீரிய ஒழுக்கம் காத்த
       சிறப்பினால் எதையும் செய்யக்
காரியத் திறமை வாய்ந்து
       கடனறி கார ணத்தால்
யாரினும் ராஜா ஜீயை
       அறிஞர்கள் போற்று வார்கள்.       1

நஞ்சினில் மிகவும் தோய்ந்து
       நாசமே கருதிப் பாய்ச்சி