சரணங்கள் உழுது பயிரிடாமல் உணவுகள் கிடைக்குமோ? உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ? அழுது அழுதுருகி அன்பின்கண் ணீர்பெருக ஆர்வத்தால் அனைவர்க்கும் சேவைகள் செய்யாமல் (சும்மா)1 என்னுடைச் சுகங்களில் இம்மியும் குறையாமல் எல்லாரும் தியாகம்செய்ய இல்லையென் றேசுவேன் ‘சொன்னதைச் செய்வதும் செய்வதே சொல்வதும்‘ சுலபமோ நான்அந்தச் சுத்தத்தில் குளிக்காமல் (சும்மா)2 ஒற்றுமை பேசுவேன் உடன்கூடி நிற்காமல் ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு சொல்லுவேன் கற்றஎன் வித்தையைக் காட்டின தேயன்றிக் கசிந்து கசிந்துருகிக் காரியம் செய்யாமல் (சும்மா)3 சத்தியம் சாந்த மென்பேன் சட்டென் றதைவிடுத்துச் சரித்திரப் படிஅது சரியல்ல வென்றுசொல்வேன் வைத்தஎன் கொள்கையில் வைராக்கிய மில்லாமல் வார்த்தைக்கும் செய்கைக்கும் வேற்றுமை விலகாமல் (சும்மா)4 குறிப்புரை:- சரித்திரப்படி - வரலாற்றுப்படி -சட்டென்று விரைந்து; உடனே. 74. திருமுடி சூட்டிடுவோம் பல்லவி திருமுடி சூட்டிடுவோம் - தெய்வத் தமிழ்மொழிக்கு! (திரு) அநுபல்லவி வருமொழி எவருக்கும் வாரிக் கொடுத்துதவி வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு) |