தீமையின் இடையிலும் வாய்மையும் நடுநிலை நேர்மையும் நினைப்பினில் தூய்மையும் பலித்திடும் (மறந்)3 பணபலம் நடுங்கிடப் படைபலம் ஒடுங்கிடக் குணநலம் கொடுத்துநம் குலப்புகழ் நிறுத்தினான்.(மறந்)4 96. நடை தரும் வேதம் பல்லவி கடவுளின் தூதன் காந்தி மகாத்மா! அநுபல்லவி நடைதரும் வேதம் - ஞான சங்கீதம்! சரணங்கள் நினைத்திடும் பொழுதே மனத்துயர் தீரும் நெருங்கிட உணர்ந்தால் பெருங்குணம் சேரும் அனைத்துள நேரமும் அவன்கதை ஓதின் அன்பையும் அருளையும் அறிந்திடப் போதும். (கடவு)1 கல்வியும் கேள்வியும் கருதிடும் பயனும் கருணையின் நிலை சொல்லும் கலைகளின் நயனும் பல்வித வேள்வியின் பலன்கள் கைகூடும் பரம்பொருள் தூதன்நம் காந்தியைப் பாடின் (கடவு)2 கோபமும் தாபமும் கூண்டோடு மறையும் கொடுமையும் வணங்கிடும் குணநலம் நிறையும் மாபெரும் காந்தியின் மகிமையைத் தொழுதால் மண்டலம் எங்கணும் சண்டைகள் ஒழியும். (கடவு)3 |