இயல்புடை பாசங்கள் ஏதும்அவற் கில்லை இரக்கமும் ஈகையும் எண்ணரும் எல்லை முயல்வதன் ஆற்றலில் முடிவிலன் காந்தி முற்றிலும் பேரின்பக் கடலெனும் சாந்தி (கல்வி)2எண்குணத் தோன்எனும் இறைவன் இயல்பை எளிதினில் காட்டும் காந்தியின் செயல்கள் விண்ணகத் தோரெனும் தேவரும் வியக்கும் விந்தைநம் காந்தியர் தந்தநல் இயக்கம். (கல்வி)3 114. கலகக் கலி தீர்க்கும் வழி பல்லவி கலகங்கள் இல்லாமல் உலகெங்கும் வாழ்ந்திட காந்தியின் வழிதான் கலிதீர்க்கும். அநுபல்லவி விலங்குகள் மக்களெல்லாம் விஞ்ஞான வெறிவிட்டு வித்தகன் காந்திசொல்லும் சத்தியம் வழிபட்டு (கலக) சரணங்கள் அரக்கரின் கதைபோல அழிக்கவே பலம்தேடி ஐயையோ மனிதர்கள் அலைகின்றார் கொலைநாடி இரக்கம் புரிவதற்கே ஈசன்கொடுத்த ஜன்மம் இப்படி அழிவதைத் தப்பிட வேணும் என்னின் (கலக)1 அன்பை மறந்துவரும் அறிவினால் பயனில்லை அருளைத் துறந்துபெறும் ஆற்றல் மிகவும்தொல்லை இன்பம் குலைவதெல்லாம் எந்திர மோகத்தால் என்பதை அறிந்திடில் துன்பங்கள் குறைந்திடும். (கலக)2 115. கருணை வழி பல்லவி காந்தியை விட்டால் கதிவேறில்லை கருணையின் வழிகாட்ட |