புலவர் சிவ. கன்னியப்பன் 167

118. சொல்லவொண்ணாப் பெருமை

பல்லவி

சொல்லில் அடங்குமோ காந்தியின் பெருமை?
சொன்ன வரைக்கும் சுகிர்தம்?

அநுபல்லவி

கல்லும் புல்லும் கனிந்து கசிந்து ருகும்
கருணையின் வடிவென அருள்நெறி காட்டிய       (சொல்)

சரணங்கள்

அன்பினை விட்டொரு இன்பமும் இல்லை
அகிலம் கண்டுள அறிவின் எல்லை
துன்பம் செய்வதைத் தொழிலெனத் தொடரும்
தூர்த்தரும் வியந்திடும் கீர்த்திகள் படரும்.       (சொல்)1

பொய்யும் வஞ்சமும் புலையும் கொலையும்
போர்வெறிக் கொடுமையும் சீர்குலைந் தலையும்
வையம் திருந்திடும் வழிதர என்றே
வாழ்த்துதன் உயிரையும் ஈந்தனன் அன்றோ!       (சொல்)2

நற்குணம் என்பன யாவையும் கூடி
நானிலம் முழுவதும் நலம்பெற நாடி
அற்புதப் புதுமுறை அறவழி காட்டும்
அமரரும் அறிய அன்பினை ஊட்டும்.(சொல்)3

119. காந்தி ஜயந்தி

பல்லவி

காந்தியின் திருநாள் இது கண்டீர்
கடமைகள் நமக்கெலாம் மிகஉண்டு.

அநுபல்லவி

சாந்தியைக் கோரிச் சகலமும் துறந்த
சத்துவபோதன் புத்தனும் பிறந்த       (காந்தி)