252நாமக்கல் கவிஞர் பாடல்கள்

உருபுலன் மனஒ ழுங்கால்
       உன்னுளே உலகாள் தேவன்
வரும்வரும் பஜகோ விந்தம்;
       வலியவே பஜகோ விந்தம்.       31

குறிப்புரை:- துரு - உபாயம், களிம்பு; துரிதமாய் - விரைவாய்;
மூர்க்கர் - கீழ்மக்கள்,இழிஞர்; பேதம் - வேறுபாடு;
மேது - அறிவு; பகர்ந்திட - சொல்ல.

179. ஸ்ரீ பகவத் கீதை : ஸாங்கிய யோகம்
இரண்டாம் அத்தியாயம்

அர்ச்சுனன் கேட்கிறான் :

கோவா விளங்கச் சொல்வாய்
       கெட்டியாம் அறிவு பெற்றோன்
பேசுமா றெவ்வா(று) அன்னான்
       பிறரிடம் என்ன சொல்வான்?
ஆசிலா அவனுக் குள்ளே
       அடையாளம் யாது? அந்தத்
தேசுளான் எதனைச் செய்வான்?
       தேர்ந்திடும் பலன்தான் என்ன?       1

ஸ்ரீபகவான் சொல்லுகிறார் :

பார்த்த! கேள் சொல்லு கின்றான்,
       பலமுள்ள அறிஞன் தன்மை;
ஆர்த்தெழு மனத்தில் தோன்றும்
       ஆசைகள் அனைத்தும் நீக்கித்
தீர்த்தபின் ஆத்மா தோன்றும்
       தெரிந்துளே மகிழ்வா னாயின்
நீத்தவன் அவனே என்ப
       நிச்சய புத்தி பெற்றோன்.       2