185. பூமிதானப்பயணம் பூமி தானம் செய்வதே புண்ணியத்திற் புண்ணியம் புனித மான முறையில் நாட்டின் வறுமை போகப் பண்ணிடும்; சாமி சாட்சி யாக எங்கும் சண்டை கள்கு றைந்திடும்; சரிநி கர்ச மான வாழ்வு சத்தி யம்நி றைந்திடும். 1 ஏழை யென்றும் செல்வர் என்றும் ஏற்றத் தாழ்வு போய்விடும்; எங்கும் யாரும் பகைமை யின்றிப் பங்கு கொள்வ தாய்விடும்; கோழை யின்பொ றாமை தூண்டும் குற்றம் யாவும் நீங்கிடும்; கொடுமை யான பஞ்சம் விட்டுக் குணந லங்கள் ஓங்கிடும். 2 உடலுழைத்தே உணவு முற்றும் உண்டு பண்ணும் உழவர்கள் உரிமை சொல்ல நிலமி லாமல் உள்ளம் வெந்துஇங்(கு) அழுவதா? உடல் சுகித்துஇங்(கு) உலகி னுக்கே உதவி யற்ற ஒருசிலர் ஊரி லுள்ள பூமி முற்றும் உரிமை கொண்டு திரிவதா? 3 உலகி லுள்ள நிலம னைத்தும் உலக நாதன் உடைமையே; ஊரி லுள்ள விளைநி லங்கள் ஊர்ப்பொ துவாம் கடமையே. |