புலவர் சிவ. கன்னியப்பன் 303

சத்தி யத்தின் பற்றுக்கொண்ட
       சாந்த வாழ்வு வேண்டுமா?
மற்ற செய்து மனிதமேன்மை
       மாய்ந்து போக வேண்டுமா?       7

தீர மாகப் பொறுமை காட்டும்
       திறம டுக்க வேண்டுமா?
வீர மென்று கோப மூட்டும்
       வெறிபி டிக்க வேண்டுமா?       8

ஆசை யற்ற சேவைசெய்யும்
       நேச வேலை வேண்டுமா?
தேச பக்தி மாசுகொள்ளும்
       நாசவேலை வேண்டுமா?       9

தெய்வம் உண்மை என்றுநம்பும்
தேச பக்தி வேண்டுமா?
பொய்யும் போரும் புனிதமென்று
பேசும் புத்தி வேண்டுமா?       10

வலியப் பூமி தானம் செய்து
வாழ்த்துக் கொள்ள வேண்டுமா?
வலிமை வந்து தம்மைத்தாக்கி
வீழ்த்திக் கொல்ல வேண்டுமா?       11

190. கூட்டுறவில் சேருங்கள்

கூட்டுறவில் சேருங்கள்
       கூடி வாழப் பாருங்கள்
நாட்டில் மிக்க ஏழையும்
       நன்மை பெற்று வாழலாம்.       (கூட்)1

சேர்ந்து வாழும் நிலைமையே
       சீர்சிறந்த வலிமையாம்
சோர்ந்து போன மக்களும்
       சுகங்கள் நாடத் தக்கது.       (கூட்)2