பக்கம் எண் :

43

  பெண்மதிமாலை
  ஊரிற்பெண் கள்கொண்ட சீரினை யாகிலும்
உற்றுப் பாரு மைய மாரே
பாரி தனைநாவில் வைத்தான் பிதாமகன்
பாகஞ் சிரம்வைத்தான் சிவன்மா சுகன்
மார்பில் வைத்தான் ஹரி பெண்திருடன் குகன்
மங்கை தேடிச்சந்தி வந்தான் கரிமுகன்
  (கேளும்) 3
  உங்கட் குதவியா யெங்களைத் தேவனுண்
டாக்கிய தையறி யீரோ-செல்வ
மங்கையுடன் கல்வி நங்கைமு தலானோர்
மாதரென் றுகுறி யீரோ
எங்களை யல்லாமல் நீங்கள் உதித்தீரோ
ஏறிய காயத் திருந்து குதித்தீரோ
அங்கப்பா லுண்ணாமல் தேகம் உதித்தீரோ
அடிமையென் றெங்கள் தலையில் விதித்தீரோ
  (கேளும்) 4
  போதக யூரோப்பு மாதர்க ளைக்கண்டு
பொங்கிப் பொறாமைகொண் டோமே-என்றும்
பேதமில் லாஇந்தி யாதனில் நாங்கள்
பிறந்தென்ன லா பங்கண் டோமே
நாதக் கல்விக்கு நகை எந்த மூலையே
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
வேதநா யகன்செய் பெண்மதி மாலையே
வேண்டினோம் தாரும் விடோம்உங்கள் காலையே
  (கேளும்) 5